‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘வலிமை’. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனிகபூரே இப்படத்தையும் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு சமிபத்தில் ஹைதராபாத்தில் துவங்கி தொடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ‘மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’, ‘வட சென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், சமீபத்தில் வெளியான ‘V1 MURDER CASE’ படத்தை இயக்கியவருமான பாவேல் நவகீதன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் கதாநாயகியாக நடிக்க இருக்கும் நடிகை மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#Thala #AK60 #BoneyKapoor #HVinoth #BayViewProjectsLLP #ZeeStudiosInternational #PavalNavaneethan #V1DirectorInValimai #Valimai #NirovShah #YuvanShankarRaja #AjithKumar
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...