கட்டிட கலை நிபுணராக நடிக்கும் நயன்தாரா!

‘தர்பார்’ படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடிக்க, நயன்தாரா கட்டிட கலை நிபுணராக நடித்துள்ளார்!

செய்திகள் 30-Dec-2019 1:02 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில்ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் உட்பட பலர் நடிக்கும் படம் ’தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் ரஜினி மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார் என்றும், நயன்தாரா கட்டிட கலை நிபுணாராக நடித்துள்ளார் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். அத்துடன் நயன்தாராவின் கதாபாத்திரம் கதையில் மிக முக்கியத்துவமுள்ள கதாபாத்திரமாக அமைந்திருப்பதோடு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் ‘தர்பார்’ படத்தில் அரசியல் இல்லை என்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசும்’ என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ குறித்து கூறியுள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘தர்பார்’ படத்தின் பிரீமியர் காட்சி அமெரிக்காவில் 8-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்.

#Darbar #LycaProductions #Rajinikanth #Nayanthara #YogiBabu #Anirudh #ARMurugadoss #DarbarFromPongal2020 #SantoshSivan #SreekarPrasad #ChummaKizhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;