பிரேம்ஜி அமரனுக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!

’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சாங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் படம்

செய்திகள் 28-Dec-2019 12:15 PM IST Top 10 கருத்துக்கள்

ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பிரேம்ஜி அமரன் மற்றுமொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சாங்கையா இயக்குகிறார். ‘டச்வுட் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனமும், ‘சூப்பர் டாக்கீஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரேம்ஜி அமரனுடன் ஒரு கதாநாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் ரேஷ்மா நடிக்கிறார் என்றும் இன்னொரு நாயகியாக ‘ஆட்டோ ஷங்கர்’ வெப் சீரியலில் நடித்த ஸ்வயம் சித்தா நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மேலும் பல அதிகாரர்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;