விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் ‘தமிழரசன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. ’எஸ்.என்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையாராஜா இசை அமைக்கிறார் என்றும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உட்பட பலர் நடிக்கின்றனர் என்றும் தகவலை ஏற்கெனவெ பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்தை அடுத்த மாதம் (ஜனவரி) ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படத்திற்காக இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் பாடியிருக்கிறார்கள்.
#SureshGopi #VijayAntony #PranavMohan #Ilaiyaraaja #Thamilarasan #RemyaNambeesan #Pranav #Khakhee #KJYesudas #Sangeetha #ThamilarasanAudioLaunchOnDec29th #Ilaiyaraaja #ThamilarasanAudioLaunch
அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா இணைந்து நடிக்கும் படம் ‘மாயநதி’. மேலும்...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...
இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளவர் இளையராஜா. இவருக்கு ஏற்கெனவே பல்வேறு விருதுகள்...