தமிழகத்தில் சமீபத்தில் சில கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘கால் டாக்ஸி’. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை ‘கே.டி.கம்பைன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.கபிலா தயாரிக்கிறார். பா.பாண்டியன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மெர்லின்’, ‘ஜீவி’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அஸ்வினி நடிக்கிறார். இவர்களுடன் ‘மொட்டை’ ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’ சிவகுமர், முத்துராமன், சந்திரமௌலி, சேரன்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை டேவிட் அஜய் கவனிக்க, பாணன் இசை அமைக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
#CallTaxi #SanthoshSaravanan #JiiviAshwini #MottaRajendran #MadanBabu #PaPandian #RKabilaa #KDCombines
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
சந்தானம் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் ‘அக்யூஸ்ட் நம்பர் 1’ (A1). ஜான்சன் கதை, திரைக்கதை, வசனம்...