சூர்யா படத்திற்கு பிரபல இயக்குனரின் பாராட்டு!

சூர்யாவின் 2D  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘சில்லுக்கருப்பட்டி’ படத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு!

செய்திகள் 27-Dec-2019 11:42 AM IST Top 10 கருத்துக்கள்

‘பூவரசம் பீப்பி’ படத்தை ஹலீதா ஷமீம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘சில்லுக்கருப்பட்டி’. நகரத்தில் நடக்கும் நான்கு காதல் கதைகளை கொண்ட இப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், பேபி சாரா அர்ஜுன், ‘காலா’ மணிகண்டன், நிவேதிதா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நான்கு கதைகளாக உருவாகி உள்ள இப்படத்தில் ஒரு கதையை அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, இன்னொரு கதையை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்ற இரண்டு கதைகளை யாமினி யக்னமூர்த்தி, விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. பெரும்பாலான பத்திரிகையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இப்படம் இன்று வெளியாகிறது. ‘டிவைன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தரமான படங்களை தயாரித்தும்,. வெளியிட்டும் வரும் சூர்யாவின் ‘2D ENTERTAINEMENT’ நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், படத்திற்கு பாராட்டு தெரிவிக்கையில், ‘‘மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு! திரை முழுக்க கடத்தி, பார்வையாள்ர்களை தித்திக்க வைத்திருக்கிறது இந்த சில்லுக்கருப்பட்டி! சுவைக்க தந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;