விக்ரம் படத்திற்கு அட்டகாச தலைப்பு!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்  படத்திற்கு ‘கோப்ரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 26-Dec-2019 11:14 AM IST Top 10 கருத்துக்கள்

‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இது விக்ராம் நடிக்கும் 58-வது படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம்-58’ என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு இப்போது ‘கோப்ரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து வர, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;