‘நரகாசூரன்’ ரிலீஸ் – தகவல் அளித்த இயக்குனர்!

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்கும் ‘நரகாசூரன்’ மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறியுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்!

செய்திகள் 24-Dec-2019 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் நடித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் பல்வேறு பிரச்சனைகளால் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. வெற்றிப் படமாக அமைந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் இது என்பதால இப்படத்தின் மீது பெரும் ஏதிர்பார்ப்பு இருந்து உருவாகியுள்ளது. இந்த படம் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிலையில் கார்த்திக் நரேன் தனது அடுத்த படமாக ‘மாஃபியா’வை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடந்து இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திக் நரேனிடம் ரசிகர் ஒருவர் ‘நரகாசூரன்’ எப்போது வெளியாகும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த கார்த்திக் நரேன் ‘நரகாசூரன்’ நிச்சயம் 2020, மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த முறையாவது ‘நரகாசூரன்’ திரைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

#NaragasooranFromMarch2020 #Naragasooran #ArvindSwami #Aathmika #ShriyaSaran #SundeepKishan #Indrajith #KarthickNaren #Mafia #ArunVijay #Prasanna #PriyaBhavaniShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காட்டேரி ட்ரைலர்


;