விஷாலின் ‘துப்பறிவாளன்-2’ அப்டேட்!

லண்டனில் நடந்து வந்த ‘துப்பறிவாளன்-2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 23-Dec-2019 12:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஆக்‌ஷன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்-2’. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2071-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘துப்பறிவாளன்’. இப்பட வெற்றியை தொடர்ந்து மிஷ்கினும், விஷாலும் மீண்டும் இணைந்து ‘துப்பறிவாளன்-2’வை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் லண்டனில் நடந்து வந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை இப்படத்தை தயாரிக்கும் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் ஆஷ்யா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ரஹ்மான், பிரசன்னா, கௌதமி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆதித்ய மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு நீரவ் ஷா என்று பெரும் பிரபலங்கள் இணைந்துள்ள ‘துப்பறிவாளன்-2’, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சைக்கோ’வை தொடர்ந்து வெளியாக இருக்கிறது.

#Myskkin #Thupparivaalan #Thupparivaalan2 #Thupprivaalan2FirstScheduleWrappedUpInLondon #Vishal #Ashya #NirovShah #Ilaiyaraaja #VishalFilmFactory #Psycho #PsychoFromJan24th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;