கைலா – விமர்சனம்

மர்மமான முறையில் பழி வாங்கும் கதை!

விமர்சனம் 21-Dec-2019 12:09 PM IST Top 10 கருத்துக்கள்

PRODUCTION : BOOTHOBAS INTERNATIONAL FILMS
DIRECTION : BASKER SEENUVAS
CAST : THAANA NAIDU, BASKER SEENUVAS, KAUSALYA, KAILA, ANBALAYA PRABAKARAN
MUSIC : SWARAN
CINEMATOGRAPHY : BARANI SELVAM
EDITOR : ASOK CHARLES

சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து வில்லன் கேரக்டரிலும் நடித்து இயக்கியுள்ள படம் ‘கைலா’. பேய் பட ஸ்டைலில் உருவாகியுள்ள ‘கைலா’ எப்படி?

கதைக்களம்

பூட்டி கிடக்கும் ஒரு பங்களா! அதனருகில் தொடர்ச்சியாக மரணங்கள் நடக்கின்றது! காவல்துறை அந்த மரணங்களை விப்பதாக பார்க்கிறது. அந்த ஏரியாவிலுள்ள மக்களோ அந்த மரணங்களுக்கு காரண்ம் அந்த பங்களாவில் இருக்கும் பேய்தான் என்று நம்புகிறார்கள். இந்நிலையில் அங்கு நடக்கும் மரணங்கள் தானா என்ற பெண எழுதும் கதையில் வரும் கதாபார்த்திரங்களாக இருக்கின்றன! அதே நேரம் அந்த மரணங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் நடந்திருப்பதும் தெரிய வருகிறது. தானா யார்? அந்த மரணங்கள் நடந்ததற்கான காரணம் என்ன? என்பதே ‘கைலா’வின் கதைப் பின்னணி!

படம் பற்றிய அலசல்

பேய், த்ரில்லர் பட வரிசையில் வெளியாகியுள்ள ‘கைலா’வின் கதைக்களம் ரசிகர்களை நிச்சயம் கவரும். ஆனால் அதை திரைக்கதையாக்கி படமாக்கியதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. எழுத்தாளராக வரும் தானா, தொழிலதிபராகவும், வில்லனாகவும் வரும் பாஸ்கர் சீனுவாசன் இவர்களை மையப்படுத்திய திரைக்கதையில், தானா யார் என்பது தெரிய வருவதையும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸையும் ரசிக்க வைக்கும் விதமாக படமாக்கிய இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டி படமாக்கி இருந்தால் ‘கைலா’ மேலும் கவனம் பெற்றிருக்கும். ஸ்வரனின் பின்னணி இசை, பரணி செல்வத்தின் ஒளிப்பதிவு முதலான டெக்னிக்கல் விஷயங்கள் ‘கைலா’விற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் படத்தொகுப்பாளர் அசோக் சார்லஸின் பணி குறிப்பிடும்படியாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகியாக, எழுத்தாளராக வரும் தானா நாயுடு அல்லட்டல் இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தை இயக்கி வில்லனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசன் தோற்றத்திலாகட்டும், அமைதியாக இருந்துக்கொண்டு செய்யும் வில்லத்தனத்திலாகட்டும் கவனம் பெறும்படியான நடிப்பை வழங்கியுள்ளார். போலீஸ் அதிகாரிகளாக வரும் அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர், வில்லனால் பாதிக்கப்படும் குடும்ப தலைவியாக வரும் கௌசல்யா மற்றும் மதுரை வினோதன், வீரா, கோகன், குழந்தை கைலா ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.திரைக்கதையில் உள்ள சில திருப்பங்கள், கிளைமேக்ஸ்

2.பின்னணி இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.வலுவும், நேர்த்தியும் இல்லாத திரைக்கதை அமைப்பு…

2.படத்தொகுப்பு

மொத்தத்தில்…

ஹாரர், த்ரில்லர் பட ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ள ‘கைலா’வை வரவேற்கலாம்!

ஒருவரி பஞ்ச் : மர்மமான முறையில் பழி வாங்கும் கதை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வைகை எக்ஸ்பிரஸ் - டிரைலர்


;