செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா, ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ‘ஆரஞ்ச் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனமும், ‘GLO STUDIOS’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான இப்படம் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் முடங்கி கிடந்தது. இப்போது படத்தின் மீதான அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்ட நிலையில் இப்படத்தை இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ‘NGK’. சூர்யா நடித்த இப்படம் அரசியல் கலந்த படமாக அமைந்திருந்து. இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஃபேமிலி த்ரில்லர் ரக படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
#Selvaraghavan #NanditaSwetha #NenjamMarappathillai #SJSuryah #AravindKrishna #YuvanShankarRaja #ReginaCassandra
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம்...
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...