‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’. கிராமத்து கதை அமைப்பைகொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குருசோமசுந்தரம், மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா உட்பட பலர் நடிக்கிறார்கள். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சுகுமார் ‘மாமனிதன்’ படம் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்த ‘தர்மதுரை’ படத்திலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பை கொண்ட படமாக இருக்கும். ‘மற்றவர்களை பார்த்து வாழாமல் நமக்காக நாம் வாழ்வோம்’ என்ற கருத்தை தாங்கி வரும் இப்படம் நடுத்தர குடுமப்த்து கதையாக உருவாகி உள்ளது’’ என்று கூறியுள்ள சுகுமார், இப்படத்தின் முக்கியமான நான்கு காட்சிகளை ஒரே ஷாட்டில் படம் பிடித்ததாகவும், இப்படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரியின் நடிப்புக்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் ‘YSR புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத கவனித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சாம்பியன்’. இந்த படத்தில் அறிமுகம் விஷ்மா கதையின்...