‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகனும், அருண் விஜயும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தை ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிரார் என்றும், இந்த படத்தில் ரெஜினா கெசண்ட்ரா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தோம். இந்த படத்தின் பூஜை சென்ற 9-ஆம் தேதி சென்னையில் துவங்கி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. ‘ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்’ படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். ‘குற்றம்-23’ படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இப்படத்திலும் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ‘ஜிந்தாபாத்’ டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...