இயக்குனராக இருந்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியவர் பா.ரஞ்சித். இந்த இரண்டு படங்களும்
நல்ல வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களோடு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து ஐந்து படங்களை தயாரிக்க இருக்கின்றன. இந்த ஐந்து படங்களில் ஒரு படத்தை மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இயக்குகிறார். மற்றொரு படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
அடுத்த மூன்று படங்களை பா.ரஞ்சித்தின் உதவியாளர்களான சுரேஷ்மாரி, மோசஸ், ப்ராங்க்ளின் ஆகியோர் இயக்குகிறார்கள். இந்த ஐந்து படங்களுக்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனது மூன்றாவது படத்தை இயக்குவார் மாரி செல்வராஜ். இந்த ஐந்து படங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியாக இருக்கின்றன.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்...
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்...
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரிக்கும்...