‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தம்பி’. கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப், மோகன் லால், த்ரிஷா நடிப்பில் ‘RAM’ (ராம்) என்ற மலையாள படத்தை இயக்குகிறார். ‘திருசியம்’ மலையாள படத்தை தொடர்ந்து மோகன் லாலும், ஜித்து ஜோசஃபும் மீண்டும் இணையும் இந்த படத்தின் மூலம் த்ரிஷா முதன் முதலாக மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் த்ரிஷா டாக்டராக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று கொச்சியில் நடந்தது. இந்த படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என்றும் இந்தியா தவிர்த்து பல வெளிநாடுகளிலும் படமாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Trisha #Mohanlal #Superstar #JeethuJoseph #Thambi #Jyotika #Karthi #Sathyaraj #ThambiFromDecember20th #Ram
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...