பிரபுதேவாவை ரொம்பவும் பிடிக்கும்! – சல்மான் கான்

‘தபாங்-3’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான்கான், பிரபுதேவா பேசியவை….

செய்திகள் 17-Dec-2019 12:36 PM IST Top 10 கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சுப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப், மாஹிகில் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ‘தபாங்-3’. இந்த படம் வருகிற 20-ஆம் தேதி ஹிந்தி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படக்குழுவினர் நேற்று மாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சல்மான்கான் பேசும்போது,

‘‘நான் நடித்த வாண்டட் படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் சென்னையில் நடந்தது. அப்புறம் ‘சீயான்’ விக்ரம் நடித்த ‘சேது’வை ரீ-மேக் செய்து நடித்திருக்கிறேன். எப்போதும் தென்னிந்திய திரைப்படங்களை ரீ-மேக் செய்வதில் எனக்கு அதிக பிரியம் உண்டு. நடிகராக மாறுவதற்கு முன்பு ஒரு விளம்பர படத்தில் நடிக்க இங்கு வந்திருக்கிறேன். சென்னை பற்றி நிறைய நல்ல நினைவுகள் உண்டு. பிரபுதேவாவின் வேலை செய்யும் விதம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார். காமெடி செய்ய வைப்பார். அதனால் இந்த படத்திற்கு பிரபுதேவா இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன். சுல்புல் பாண்டே எப்படி சுல்புல் பாண்டேவாக மாறினார் என்பதை இப்படம் விளக்கும். இத்துடன் இந்த கதை முடிவடையும். இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார் சல்மான் கான்!

பிரபு தேவா பேசும்போது, ‘‘இந்த படத்தை எடுக்க சல்மான் கான் முடிவு செய்தபோது, இயக்க என்னை அழைத்தார். படம் ஆரம்பிக்கும்போதே இந்த படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கில் எடுக்கலாம் என்று கூறினார். அப்போது முதல் கடினமாக உழைத்தோம். ‘தபாங்-3’ அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் பிரபுதேவா.

இந்நிகழ்ச்சியில் சுதீப், மாஹி கில், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் கோட்டப்பாடி ராஜேஷ் ஆகியோரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;