தனுஷின் ‘பட்டாஸ்’ வெடிக்கப் போகும் தேதி!

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’ ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகிறது~!

செய்திகள் 17-Dec-2019 12:33 PM IST Top 10 கருத்துக்கள்

’கொடி’ படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமாரும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பட்டாஸ்’. தனுஷின் 39-ஆவது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் ’பாட்டாஸ்’ படத்தை ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ரஜினியின் ‘தர்பார்’ படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மருமகனான தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜனவரி 16-ஆம் தேதி வெளியாக இருப்பதால் இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவிருக்கிறது. ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுடன் மெஹ்ரின் பிரசித்தா, சினேகா, நாசர், முனீஸ்காந்த், சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விவேக், மெர்வின் இசை அமைத்து வருகிறார்கள்.

#Pattas #Dhanush #DuraiSenthiKumar #Sneha #SathyaJyothiFilms #VivekMervin #OmPrakash #PattasFromJanuary16th2020

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;