28,000 பேர் இணைந்து தயாரிக்கும் படம்!

கிரௌட் ஃபண்டிங் முறையில் 28,000 பேர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஹே மணி கம் டுடே.. கோ டுமாரோ யா’

செய்திகள் 16-Dec-2019 11:32 AM IST Top 10 கருத்துக்கள்

யூ-ட்யூப் ‘பரிதாபங்கள்’ நிகழ்ச்சி பிரபலங்களான கோபி, சுதாகர் திரைப்பட தயாரிப்பிலும் களம் இறங்கி உள்ளனர். ‘CROWED FUNDING’ முறையில் 28,000 பேர் முதலீட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. 24 நாடுகளை சேர்ந்த 28,000 பேர் முதலீடு செய்துள்ள ஆறரை கோடி ரூபாயில் இப்படம் உருவாக இருக்கிறது. கிரௌட் ஃபண்டிங் முறையில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட படம் ‘லூசியா’. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தை தொடர்ந்து தமிழிலும் கிரௌட் ஃபண்டிங் முறையில் ஒரு சில படங்கள் தயாராகி வெளியாகியுள்ளது. ஆனால் 28,000 பேர் முதலீட்டில் ஒரு படம் உருவாக இருப்பது ஏசியாவிலேயே இதுவே முதல் முறையாம்!

கோபி - சுதாகரின் ‘பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘ஹே மணி கம் டுடே… கோ டுமாரோ…யா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இப்படத்தில் சமூகத்துக்கு தேவையா நல்ல ஒரு கருத்தும் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.ஏ.கார்த்திக் என்பவர் ‘SAK’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் கோபி, சுதாகர் நடிக்க, மீதமுள்ள கேரக்டர்களுக்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையிலுள்ள கிரௌன் ப்ளாசா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் ராதாரவி, கே.பாக்யராஜ், நடிகர்கள் பிரேம், ராமச்சந்திரன், நடன இயக்குனர்கள் லலிதா-மணி உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;