ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ரஜினி நடிப்பில்‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக ‘தலைவர்-168’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ரஜினியுடன் மீனாவும், குஷ்புவும் நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கும் இந்ஹ படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறர். பாடல்களை விவேகா எழுதுகிறார்.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...