மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ‘தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஆதே நேரம் பிரியதர்ஷினி இயக்கத்திலும் ஜெயலலிதான் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்த படத்திற்கு ‘THE IRON LADY’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு படங்கள் உருவாகி வரும் நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரீஸாக இயக்கி உள்ளார்கள் கௌதம் மேனனும், ‘கிடாரி’ படத்தை இயக்கிய பிராந்த் முருகேசனனும்! ரேஷ்மா கட்டாலா எழுதிய ‘QUEEN’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸ் MX PLAYER டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் இம்மாதம் 14-ஆம் தேதி 11 எபிசோடுகளாக ஒளிபரப்பாகிறது.
இந்த வெப் சீரீஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் பள்ளி பருவ காலத்தில் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அனைகா நடித்துள்ளார். பள்ளிப் பருவ காலத்துக்கு பிறகு நடிகையான ஜெயலலிதாவின் கேரக்டரில் அஞ்சனா நடித்துள்ளார். ஜெயலலிதாவின் அம்மாவாக சோனியா அகர்வாலும், பாட்டியாக சார்மிளாவும், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடித்துள்ளனர்.
11 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரீஸின் ஐந்து எபிசோடுகளை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, மீதமுள்ள 6 எபிசோடுகளை பிரசாந்த முருகேசன் இயக்கி உள்ளார். ‘குயின்’ வெப் சீரீஸ் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த சீரீஸின் முதல் எபிசோட் பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேகமாக திரையிட்டு காட்டினர். அதில் ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சர் பதவி வகித்து தமிழக மகக்ளிடத்த்ல் பெரும் தலைவியாக திகழ்ந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து படம் துவங்குவது மாதிரி படமாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை பேட்டி கண்டவரின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில் அவரது சிறுவயது காலம், பள்ளிப் பருவ காலம், பள்ளியில் படிக்கின்ற காலத்தில் நடந்த் சுவாரஸ்யமான விஷயங்கள், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து கல்லூரியில் சேர வேண்டிய நேரத்தில் அம்மாவின் நிர்பந்தம் காரணமாக சினிமா நடிகையாவது என்று பயணிக்கிறது குயினின் முதல் எபிசோட்!
மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ள முதல் எபிசோடில் ஜெயலலிதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன், ஃப்ளாஷ் பேக்கில் சிறுவயது ஜெயலலிதாவாக வரும் அனைகா, அம்மாவாக வரும் சோனியா அகர்வால் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதோடு அந்த காலகட்டத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது மாதிரியான உணர்வை தந்தது. அதனால் ‘குயின்’ சீரீஸின் அடுத்தடுத்த எபிசோடுகளையும் உடனே பாரக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது என்றால் அது மிகையில்லை!
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
மிகப் பெரிய வெற்றியை பெற்ற மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும்...
‘கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவன்ம் தயாரிக்க, எஸ்.என்.ராஜராஜன், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்க, ஒரு...