மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘திருசியம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜித்து ஜோசஃபும், மோகன்லாலும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். தமிழில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ‘தம்பி’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசஃப் அடுத்து மோகன்லால் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் மோகன்லாலுடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கெனவே ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான த்ரிஷா இரண்டாவது முறையாக நடிக்கும் மலையாள படம் இது என்பதோடு மோகன்லாலுடன் த்ரிஷா நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை வருகிற 16-ஆம் தேதி கேரளா, கொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாகவுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை படத்தின் பூஜையன்று வெளியிட இருக்கிறார்கள்.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...