‘டெடி’ - முக்கிய தகவலை வெளியிட்ட ஆர்யா!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிக்கும் ‘டெடி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது!

செய்திகள் 9-Dec-2019 3:36 PM IST Top 10 கருத்துக்கள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படம் ‘டெடி’. இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் இயக்குனர் மகிழ் திருமேனி, கருணாகரன், மசூம் ஷங்கர் ஆகியோரும், நடிக்கிறார்கள். கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விட்டது என்ற தகவலைக் படத்தின் ஹீரோ ஆர்யாவும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் பகிர்ந்துள்ளனர்.

டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை யுவா கவனித்திருக்க, ‘காளி’, ‘திமிரு பிடிச்சவன்’ ஆகிய படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த சக்தி சரவணன் இப்படத்திற்கான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்புகழ் சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் டீஸர், டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Teddy #Arya #SayyeeshaSaigal #ShaktiSoundarRajan #DImman #StudioGreen #Sathish
#Karunakaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;