கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 17-வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12-ஆம் தேதி துவங்கி, 17-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இவ்விழா 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் துவங்குகிறது. இவ்விழாவில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
விழா துவக்க நாளன்று முதல் படமாக கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘பாராஸைட்’ என்ற கொரிய மொழிப் படம் திரையிடப்படுகிறது. உலக சினிமா பிரிவில் ஜெர்மனி, ஹங்கேரி, அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் வெளியான 95 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது.
தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஒத்த செருப்பு சைஸ் 7, பிழை, சீதக்காதி, தோழர் வெங்கடேசன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்ய கலாச்சார மையம், என்.எஃப்.டி.சி தியேட்டர் ஆகியவற்றில் படங்கள் திரையிடப்படுகின்றன.
அன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன்,...
அன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன்,...
ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ மற்றும் ‘களம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராக...