‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுக்கார் பேட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டூடியோஸ்’ ஜான் மேக்ஸ் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். ‘சம்பவம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ரஞ்சித் பாரிஜாதம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க, நாயகிகளாக பூர்ணா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ‘பக்ரீத்’ படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, ‘மொட்டை’ ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-64’ படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாக, இதற்கு இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
‘‘நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ‘சம்பவம்’ என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘சம்பவம்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சம்பவம்’ தலைப்பு எங்களுக்கு சொந்தமானது’’ என்று கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள அடையார் திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், இயக்குனர் பாலாவுடன் ‘நான் கடவுள்’ படத்தில்...
ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான், ரியாஸ்கான், கஸ்தூரி, வையாபுரி, லெனா, காயத்ரி ஆகியோர்...
தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து...