சுசீந்திரன் சிறந்த நடிகர்! – ‘சாம்பியன்’ விழாவில் நரேன் பாராட்டு!

பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற ‘சாம்பியன்’ ஆடியோ வெளியீட்டு விழா!

செய்திகள் 3-Dec-2019 12:34 PM IST Top 10 கருத்துக்கள்

‘களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராகவி தயாரிக்க, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாம்பியன்’. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு அளித்து வருகிறது. அந்த வகையில் நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்த படத்தில் அறிமுகம் விஷ்வா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மனோஜ், நரேன்,

‘ஸ்டண்ட்’ சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ள இந்த படத்தின்

இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது,

‘‘இந்தப் படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான இசையை தந்திருக்கார். நரேன் சார் அவர் கிட்ட 10 நாள்னு சொல்லி நிறைய நாள் வேல வாங்கிட்டேன். அடுத்த படத்தில் சரி பண்ணிடுறேன். மனோஜுக்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும், நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி! தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லியிருக்கேன். அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.நரேன் பேசும்போது, சுசீந்திரன் சார் படங்களுக்கு நான் ரசிகன்! அதுனால தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டேன். சுசீந்தரன் ஒரு அருமையான நடிகர்! அவர் சொல்லிக்கொடுக்கறதை நடிச்சாலே போதும். அதுனால தான் மனோஜ், வினோத் எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்க. விஷ்வா புது நடிகர். அவர் கூட தான் எனக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அருமையா நடிச்சிருக்கார். பெரிய இடத்துக்கு வருவார். இந்தப்படத்தில் வேலை பாரத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’’என்றார்!விழாவில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது, ‘‘வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்ததற்கு நண்பர் ஆர்.கே. சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்களான பாரதிராஜா, டி.ராஜேந்தர் ஆகியோர் இந்த மேடையில் இருக்கிறார்கள். இவர்கள் படங்கள் எனக்குப் பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர்! இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்றார்.

இவர்கள் தவிர விழாவில் கலந்துகொண்ட பாரதிராஜா, டி.ராஜேந்தர், ஆர்.கே.சுரேஷ், இசை அமைப்பாளர் அரோல் கரோலி உட்பட பலரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;