‘மௌனம் பேசியதே’, ‘பருத்தி வீரன்’, ‘ராம்’ உட்பட பல படங்களை இயக்கியவரும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ மற்றும் சில படங்களில் நடித்தவருமான அமீர் அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை வி.இசட்.துரை இயக்க, இப்படத்திற்கு ‘நாற்காலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அமீர் அரசியல்வாதியாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கியுள்ள ‘இருட்டு’ படம் இம்மாதம் 6-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இவரது அடுத்த படமான நாற்காலி படத்தின் அறிவிப்பு நேற்று மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. இந்த படத்தை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். இந்த படத்தின் வசனங்களை அஜயன் பாலா எழுத, கிருஷ்ண்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.