ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘நியூ சரவணா ஸ்டோர்ஸ்’ அதிபர் நடிக்கும் படம்!

ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் படம்!

செய்திகள் 2-Dec-2019 2:38 PM IST Top 10 கருத்துக்கள்

சென்னையில் பிரபல வியாபார நிறுவனமாக விளங்கி வரும் நிறுவனம் நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய். இதன் உரிமையாளர் சரவணன் என்கிற அருள்! தனது சொந்த நிறுவன விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான சரவணன் அடுத்து சினிமாவிலும் ஹீரோவாக அடியெடுத்து வைக்கிறார். சரவணன் கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் படத்தை ஜேடி - ஜேரி இயக்குகிறார்கள். இவர்கள் அஜித், விக்ரம் நடித்த ‘உல்லாசம்’ மற்றும் ‘விசில்’ ஆகிய படங்களை இயக்கவராவார்கள். விளம்பர படங்களை இயக்குவதிலும் கை தேர்ந்தவர்களான ஜேடி-ஜெர்ரி சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல நிறுவனங்களின் விளமர்பர படங்களை இயக்கியுள்ளனர். சரவணன் கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையிலுள்ள ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. இந்த விழாழில் ஏ.வி.எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், இந்த படத்திற்கு இசை அமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் சரவணனுடன் கதாநாயகியாக அறிமுகம் கீத்திகா திவாரி நடிக்க, இன்னொரு நாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் பிரபு, விவேக், விஜய்குமார், நாசர், தம்பி ராமையா, காளிவெங்கட், மயில்சாலி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் என்று நிறைய பேர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். வசனங்களை பட்டுக்கொட்டை பிரபாகர் எழுத, பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பொள்ளாச்சி, ஹிமாலயாஸ் என்று பல்வேறு இடங்களில் நடக்க இருக்கிறது.

#JDAndJerry #TheLegendSarvanaStores #SaravananArul #GeethikaTiwary #HarrisJayaraj #Vairamuthu #Velraj #Ruben #ProductionNo1

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;