‘இருட்டி’ல் மிரட்ட வரும் இஸ்லாம் பேய்!

V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இருட்டு’ படத்தில் இஸ்லாம் பேய்!

செய்திகள் 30-Nov-2019 4:47 PM IST Top 10 கருத்துக்கள்

‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’ முதலான படங்களை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி. சாக்‌ஷி சௌத்ரி, விமலாராமன், சாய் தன்ஷிகா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘இருட்டு’. ‘ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுந்தர்.சி.பேசும்போது,

‘‘ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். இந்த படத்தில் இயக்குனர் துரை, இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விஷயத்தை கையிலெடுத்துள்ளார். இது தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் புதிய விஷயமாக இருக்கும். இந்தப் படம் புதிதான ஒரு பேய் படமாக இருக்கும். டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்’’ என்றார்.இயக்குநர் VZ துரை கூறியதாவது, ‘‘இப்படத்தின் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விஷயம் சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். அப்ப நீங்க தான் சரியான ஆள்! உலகின் மிகப்பெரிய ஹாரர் பட இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான் என்று சொல்லி என்னை சமதானப்படுத்தினார். இந்தப் படம் முழுக்க பயக்கற மாதிரியான படமா இருக்கணும் நீங்க டைரக்ட் பண்ணுங்க, நான் நடிக்கிறேன் என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விஷயங்களை இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்’’ என்றார்.

இந்த படத்திற்கு கிரிஷ் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.சுதர்சன் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - டீஸர்


;