‘தம்பி’ செண்டிமெண்டான படம்! – ஜோதிகா

‘தம்பி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜோதிகா பேசியது…

செய்திகள் 30-Nov-2019 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சௌகார் ஜானகி, நிகிலா விமல், ஆன்சனபால், இளவரசு, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடிக்கும் படம் ‘தம்பி’. VIACOM 18 STUDIOS வழங்க, PARALLEL MINDS PRODUCTIONS நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது ஜோதிகா பேசும்போது,

‘தம்பி’ படத்தை பொறுத்தவரையில் எனக்கு செண்டிமெண்டான படம். காரணம், இது எங்கள் ஃபேமிலி படம்! இந்த படத்தை தயாரித்திருப்பவர் என் தம்பி சூரஜ். அவரோட முதல் தயாரிப்பு! படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பவர் என்னுடைய இன்னொரு தம்பி கார்த்தி! இப்படி இரண்டு தம்பிகள் இணைந்த இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத விஷயம். அதுவும் கார்த்தியுடன் இதுவரை நடித்ததில்லை. ‘தம்பி’ படத்தின் மூலம் அந்த சந்தர்பம் அமைந்தது. கார்த்தி நடிக்கும் படத்தை பொறுத்தவரையில் அதில் எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். ‘பருத்திவீரன்’ படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘கைதி’ படம் வரையிலும் அப்படித்தான்! தன்னுடன் நடிக்கும் மற்ற கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கணும் என்று கார்த்தி பார்த்துக்கொள்வார். கதை தேர்விலும் கேரக்டர் தேர்விலும் அவர் மிகவும் கேர்ஃபுல்லாக இருப்பார். கார்த்தி தேர்வு செய்யும் கதைகளில் அவர் மிகவும் கான்ஃபிடண்டாக இருப்பார். இந்த விஷயம் நான் ரஜினி சாரிடமும் பார்த்திருக்கிறேன். ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்கும்போது ரஜினிசார் சொன்னார், ‘ஜோ, நீ, சந்திரமுகி என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறே… இந்த படம் உன்னுடையது’ என்றார். அப்படி எனக்ரேஜ் பண்ணுவார். அது மாதிரி தான் கார்த்தியும்! ‘தம்பி’ ஃபேமிலியோட வந்து பார்க்க கூடிய ஒரு படமாக உருவாகியுள்ளது. பார்த்துவிட்டு எல்லோரும் என்கரேஜ் பண்ணுங்க’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;