அடுத்த சாட்டை – விமர்சனம்

கல்லூரிக்குள் இருக்கும் ‘ஜாதி’யை விரட்டி அடிக்கும் சாட்டை!

விமர்சனம் 29-Nov-2019 1:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: M. Anbazhagan
Production: 11: 11 Productions
Cast: Samuthirakani, Thambi Ramaiah, Athulya Ravi Yuvan & Sree Raam
Music: Justin Prabhakaran
Cinematography: Rasamathi
Editor: Nirmal

‘சாட்டை’, படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனரான அன்பழகன் தனது இரண்டாவது படமாக ‘ரூபாய்’ படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, யுவன், ஸ்ரீராம் முதலானோர் நடிப்பில் இயக்கியுள்ள ‘அடுத்த சாட்டை’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

அப்பா கல்லூரியில் தமிழ் புரொஃபஸராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகளுடன் ஒரு நண்பராக பழகி, அவர்களது எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான வழிமுறைகளை சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். ஆனால் ஜாதி வெறி பிடித்த கல்லூரி பிரின்சிபால் தம்பி ராமையாயும் அவருக்கு உடந்தையாக இருக்கும் சில புரொஃபஸர்களும் தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் முன்னேறினால் போதும் என்ற கொள்கையோடு செயல்படுவதை கண்டு சமுத்திரக்கனி அவர்களை திருத்த முயற்சிக்கிறார்! அதனால் தம்பி ராமையாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையில் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் சமுத்திரக்கனியை அந்த கல்லூரியிலிருந்து நீக்க, தம்பி ராமையா சதி திட்டங்கள் தீட்ட, மாணவ, மாணவிகளின் அன்புக்கு பாத்திரமான சமுத்திரக்கனி எப்படி தம்பி ராமையாவின் சதி திட்டங்களை முறியடித்து அவருக்கு பாடம் புகட்டி , மாணவ மாணவிகளின் நல்ல எதிர்காலத்துகு பாதை அமைத்து கொடுக்கிறார் என்பதுதான் ‘அடுத்த சாட்டை’யின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

‘சாட்டை’ படத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய விஷயங்களை கையிலெடுத்த இயக்குனர் அன்பழகன் இந்த படத்தில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையிலான உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்ல வந்துள்ளார். அதற்காக அவர் ஜாதி என்ற விஷயத்தையும் திரைக்கதையில் இணைத்துள்ளார். படத்தின் முதல் பாதி கல்லூரியில் வழக்கமாக நடக்கும் மாணவர்களுக்கு இடையிலான காதல், ஈகோ என்று பயணிக்கும் திரைக்கதை அதன் பிறகு, சமுத்திரக்கனிக்கு மாணவ மாணவிகளிடத்தில் பெரும் மதிப்பும், மரியாதையும் ஏற்படுவதை கண்டு அதை பொறுக்க முடியாமல் தம்பி ராமையா, சமுத்திரக்கனிக்கு எதிராக செயல்படுவது, அவரது ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிவந்து, தம்பி ராமையாவால் ஒரு மாணவன் இறந்து போக காரணமாவது என்று படம் சூடு பிடித்து மாணவர்களுக்கும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் நல்ல மெசேஜ் சொல்லும் விதமாக முடியும் இப்படத்திற்கு ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பு செய்துள்ள நிர்மல் படத்தின் முதல் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக பயணித்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

தமிழ் பேராசிரியராக வரும் சமுத்திரக்கனி படம் முழுக்க அறிவுரைகள் கூறியவாறே தனது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி சிறப்பு சேர்த்துள்ளார். கல்லூரி பிரின்சிபாலாக வரும் தம்பி ராமையாவின் நடிப்பும், பாடி லாங்வேஜ் விஷயங்களும் அந்த கேரக்டருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. மாறாக கேலிக்கூத்தாகவே அமைந்துள்ளது. கல்லூரி மாணவர்களாக வரும் யுவன், ஸ்ரீராம், கௌஷிக் சுந்தரம், அதுல்யா ரவி மற்றும் ஜார்ஜ் மரியம் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். அதே நேரம் படத்தில் ஏகபட்ட கேரக்டர்கள் என்பதால் சில இடங்களில் குழப்பங்களும் ஏற்படுகிறது!

பலம்

1.கல்லூரியில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறந்த முறையில் சொல்லியிருப்பது..

2.ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1.பிரின்சிபால் கேரக்டருக்கு பொருந்தாத தம்பி ராமையாவின் பெர்ஃபாமென்ஸ்

2.குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக வரும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்

கல்லூரி பேராசிரியர்களுக்கும், மணவ மாணவிகளுக்கும் இடையிலான உறவு இப்படி இருந்தால் அந்த கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்காலமும் இந்த சமூகமும் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல வந்துள்ள இப்படத்தில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை என்றாலும் சொல்ல வந்த கருத்துக்காக வரவேற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : கல்லூரிக்குள் இருக்கும் ‘ஜாதி’யை விரட்டி அடிக்கும் சாட்டை!

ரேட்டிங் : 4.5/10

#AduthaSaattai #Samuthirakani #ThambiRamaiah #AduthaSaattaiFromNov29th #AthulyaRavi #Anbazhagan #1111Productions #JustinPrabhakaran #AduthaSaattaiMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;