சூர்யா தயாரிப்பில், சசிக்குமார், ஜோதிகா நடிக்கும் படம்!

சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க சசிக்குமார், ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

செய்திகள் 28-Nov-2019 2:42 PM IST Top 10 கருத்துக்கள்

குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கி வரும் சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தின் பூஜை இன்று காலை சென்னை வளசரவாக்கத்திலுள்ள சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ வளாகத்தில் சிறப்பாக நடந்தது. கிராமிய பின்னணியில் உறவுகளின் வலிமையை சொல்லும் மிக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் படம் இது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் கதை திரைக்கதை, வசனம் எழுதி இரா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் சசிக்குமார், ஜோதிகா முக்கிய கேரக்டர்களில் நடிக்க இவர்களுடன் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்து வரும் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். முஜிப் ரஹ்மான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

இன்று காலை நடந்த இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சசிக்குமார் ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசை அமைப்பாளர் டி.இமான், திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

#2DEntertainment #Suriya #Jyotika #ProdutionNo12 #EraSaravanan #Sasikumar #Samuthirakani #Soori #Kalaiyarasan #DImman #EditorRuban #CinematographerVelraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;