இந்த வாரம் 5 படங்கள்!

இந்த வாரம் எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., அழியாத கோலங்கள்-2, அடுத்த சாட்டை, தீமைக்கும் நன்மை செய் ஆகிய 5 படங்கள் ரிலீசாகிறது!

செய்திகள் 28-Nov-2019 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய் நடித்த ‘பிகில்’ ஆகிய இரண்டு படங்கள் 25-10-19 அன்று வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடியதால் இதற்கு அடுத்த வாரம் எந்த படங்களும் வெளியாகவில்லை. பின்னர் நவம்பர் 15-ஆம் தேதி அன்று சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ‘ஆக்‌ஷன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்த ‘சங்கத்தமிழன்’ ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்த்தது மாதிரியான வரவேற்பு கிடைக்க்வில்லை. இதனை தொடர்ந்து சென்ற வாரம் (22-11-19) துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்யா வர்மா’, மதுமிதா இயக்கத்தில் உருவான ‘கே.டி.(எ) கருப்புத்துரை’ ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம், அதாவது நாளை (29-11-19) கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், ராணா ஆகியோர் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, சரண் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ் மற்றும் காவ்யா தாப்பர் நடிக்கும் ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’, ‘சாட்டை’ படப் புகழ் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கும் ‘அடுத்த் சாட்டை’, அறிமுக இயக்குனர் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர் ஆகியோர் நடிக்கும் ‘அழியாத கோலங்கள்-2’, ராகவ் ஹரிகேசவா இயக்கத்தில் முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்கள் நடிக்கும் ‘தீமைக்கும் நன்மை செய்’ ஆகிய 5 நேரடித்தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இதைப் போல அடுத்தடுத்து வரும் வாரங்களிலும் நான்கு அல்லது ஐந்து என்ற கணக்கில் படங்கள் வெளியாக இருக்கிறது.#EnaiNokiPaayumThota #AduthaSattai #MarketRajaMBBS #AzhiyathaKozhangal2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;