சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படம்!

முகநூலால்  பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண் பற்றிய படம் ‘கருத்துக்களை பதிவு செய்’

செய்திகள் 27-Nov-2019 12:01 PM IST Top 10 கருத்துக்கள்

RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கருத்துக்களை பதிவு செய்’. இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா நடித்துள்ளார். மற்றும் சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிவற்றாஇ ராஜசேகர் எழுத ராகுல்பரமகம்சா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குனர் ராகுல்பரமகம்சா கூறியதாவது,


‘‘முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அந்ந கயவர்களை தண்டிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம் இது. இந்த காலத்து பெண்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு தரும் பாடமாக இந்த படம் இருக்கும்.
சமீபத்தில் பொள்ளாச்சியில் இது போல் ஒரு சம்பவம் நடந்தது. அது நடப்பதற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதில் வரும் காட்சிகள் அந்த சம்பவங்ளோடு ஒத்து போவதால் எனக்கு பல மிரட்டல்களும் வந்தன! ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றய சமூக இளைஞர்கள், பெண்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் ஒன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போல் இன்னும் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த படம் ஒரு விழிப்புணர்வைத் தரும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார் இயக்குனர் ராகுல்பரமகம்சா.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ஓளிப்பதிவை மனோகரன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;