லண்டனில் விறுவிறுப்பாக படமாகி வரும் விஷால் படம்!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்-2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

செய்திகள் 26-Nov-2019 10:49 AM IST Top 10 கருத்துக்கள்

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆக்‌ஷன்’. இந்த படத்தை தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்-2’வில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது சம்பந்தமான புகைப்படங்களை இந்த படத்தை தயாரிக்கும் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவன ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். லண்டனில் பல நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் ஆஷ்யா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ரஹ்மான், பிரசன்னா, கௌதமி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்றும் இப்படத்தில் மிஷ்கினும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;