சித்தார்த் நடிப்பில் சத்தமில்லாமல் உருவான படம் ‘டக்கர்’

‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்தி ஜி.கிருஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘டக்கர்’

செய்திகள் 25-Nov-2019 2:18 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் சித்தார்த்தும், 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்தி ஜி.கிருஷும் இணைந்து பணியாற்றிய 'சைத்தான் கா பச்சா' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், முன் அறிவிப்பின்றி இருவரும் அடுத்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றனர். இருவரும் இணைந்து 'டக்கர்' என்ற பெயரில் மற்றுமொரு படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார்கள். இது குறித்து இயக்குநர் கார்த்தி ஜி. கிருஷ் குறியதாவது,

‘‘ஒட்டு மொத்தமாக எங்கள் குழு எடுத்த முடிவு இது. படம் இறுதி வடிவத்துக்கு வரும்வரை எந்தவித செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்பது! கடந்த ஃபிப்ரவரி மாதம் ‘டக்கர்’ படத்தின் படப்பிடிப்பைத் துவக்கினோம். இப்போது தயாரிப்புப் பணிகள் முடியும் தறுவாயில் இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். 'சைத்தான் கா பச்சா' படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, ஒரு கதைக் கருவை சித்தார்த்திடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கதைக் கருவை விரிவாக்கி முழுமையான ஸ்கிரிப்படாக எழுதும்படி சொன்னார். 'மஜிலி' தெலுங்குப் படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் சித்தார்த் ஜோடியாக நடித்திருக்கிறார். அகங்காரமும் கோபமும் கொண்ட இரண்டு கதாபாத்திரங்கள், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைத்தான் இந்தப் படம் விவரிக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌசிக்குடன் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்’’ என்று கூறியுள்ளார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் 'டக்கர்' படத்துக்கு, வாஞ்சி நாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். . கா.கெளதம் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநராக உதயகுமார் பணியாற்றி உள்ளார். உமாதேவி, கு.கார்த்திக் மற்றும் அறிவரசு ஆகியோர் பாடல்களை எழுத, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்துள்ளார். இந்த படத்தை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;