3 ஹீரோயின்களுடன் விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

விஷால், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் இணைந்து நடிக்கும் ‘FIR’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது!

செய்திகள் 25-Nov-2019 12:57 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் ‘FIR’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் பைசல், இப்ராகிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அந்த பெயர்களின் மூன்று எழுத்தை வைத்து ‘FIR’ என்று பொருள்படும் டைட்டில் வெளியிடப்பட்டிருந்ததோடு இந்த போஸ்டர் பின்னணியில் ஐ.எஸ்.அமைப்பு சம்பந்தப்பட்ட சில தகவல்களும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அஷ்வத் இசை அமைக்க, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸ்டன்ட் சில்வா அமைக்கிறார்.

#VishnuVishal #FIR #FaizalIbrahimRaiz #ManuAnand #ManjimaMohan #SujataaEntertainments #ManjimaMohan #RaizaWilson #RebaMonicaJohn #ArulVincent #PrasannaGK #Ashwath #PoorthiPravin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;