முத்த காட்சி தவறில்லை – ஆர்.கே.சுரேஷ்

அறிமுகம் அலெக்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம்  ‘எதிர்வினையாற்று’

செய்திகள் 25-Nov-2019 12:25 PM IST Top 10 கருத்துக்கள்

‘தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் அனிதா தயாரித்திருக்கும் படம் ‘எதிர்வினையாற்று. இந்த படத்தில் அறிமுகம் அலெக்ஸ் கதாநாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இளமைதாஸ் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்கிவும் செய்துள்ளார். டாக்டரான அலெக்ஸுடன் இந்த படத்தில் கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது,

‘‘இந்த படத்தில் தயாரிப்பாளர் அனிதா மேடத்துக்காகவே நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் ஹீரோ அலெக்ஸ் மீது எனக்கு ஒரு முதலில் ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது டாக்டராக இருப்பவர் எப்படி படத்தை எடுக்கப் போகிறார் என்று! ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்து விடுவார் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அதைப்போலவே படத்தை சிறப்பாக எடுக்கவும் செய்திருக்கிறார். தனது முதல் படத்திலேயே ‘லிப் லாக்’ காட்சி எல்லாம் வைத்து அசத்தியிருக்கிறார். முத்தக்காட்சி தவறில்லை. அதுவும் அன்பின் ஒரு அடையாளம்தான்! இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும்’’ என்றார்.

படத்தின் கதாநாயகனும், இயக்குனர்களில் ஒருவருமான அலெக்ஸ் பேசும்போது, ‘‘நிறைய பேர் டாக்டராக இருந்தவன் எப்படி நடிகனாக மாறினான் என்று கேட்டார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீதும் சினிமா மீதும் ஈர்ப்பு உண்டு. நான் நடிகனானதற்கு முதல் நன்றி என் அம்மாவுக்குதான். அவரிடம் ஒரு படத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்று கூறினேன். மறுப்பேதும் சொல்லாமல் அதற்கு சம்மதித்து என்னை ஊக்கப்படுத்தினார். இந்த படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் எடுத்து முடித்தோம். அதற்கு காரனம் என் டைரக்‌ஷன் டீம் மற்றும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள மனோஜ் அவர்களும்தான். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;