இறுதிகட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனி படம்!

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியது!

செய்திகள் 23-Nov-2019 2:54 PM IST Top 10 கருத்துக்கள்

‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இயக்கி வரும் படங்கள் ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ மற்றும் ‘அக்னி சிறகுகள்’. இதில் ‘அலாவுதீனும் அற்புத கேமராராவும்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் ‘அக்னி சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, ரைமா சென், பிரகாஷ்ராஜ் நாசர் ஆகியோருடன் சமீபத்தில் அக்‌ஷரா ஹாசனும் இணைந்து நடித்து வருகிறார். ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் ஆகிய இடங்களில் இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாகியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். .கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் பாடல்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

#ArunVijay #VijayAntony #AgniSiragugal #ShaliniPandey #PrakashRaj #TSiva #AksharaHaasan #AmmaCreations #Jwala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;