‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கி வரும் படம் ‘கபடதாரி’. இந்த படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நந்திதா ஸ்வேதா நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமான தகவலை வெளியிட்டிருந்தோம். சமீபத்தில் பூஜயுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது நந்திதா ஸ்வேதா இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதாவுடன் சத்யராஜ், நாசர், பூஜா குமார் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
கிரியேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சைமன் கே.கிங் இசை அமைத்து வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.
#Sibiraj #Sathyaraj #PradeepKrishnamoorthy #Ranga #Maayon #Walter #JacksonDurai #PradeepKrishnamoorthy #GDhanjayan #LalithaDhananjayan #CreativeEntertainersAndDistributors #SimonKKing #Nasser #JohnMahendran #Kabadadaari
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தம்பி’. கார்த்தி, ஜோதிகா,...
மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘திருசியம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜித்து ஜோசஃபும்,...