கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’யின் முக்கிய தகவல்!

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கார்த்தி வெளியிடுகிறார்!

செய்திகள் 23-Nov-2019 11:43 AM IST Top 10 கருத்துக்கள்

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல், ஆன்சனபால், இளவரசு, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடிக்கும் படம் ‘தம்பி’. இந்த படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 4 மணிக்கு கார்த்தி தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட இருக்கிறார். கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா, தம்பியாக நடிக்கும் இந்த படத்தை . VIACOM 18 STUDIOS வழங்க, PARALLEL MINDS PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் (டிசம்பர்) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கைதி’ படத்தை தொடர்ந்து ‘தம்பி’ வெளியாக இருக்கிறது
#Karthi #Jyothika #JeethuJoseph #Viacom18Studios #ParallelMinds #SurajSadanah #Thambi #Donga #ThambiFirstLook #ThambiFromDecember #Suriya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;