விஜய்சேதுபதி படத்தில் இணைந்த மோகன் ராஜா!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவும்  நடிக்கிறார்!

செய்திகள் 22-Nov-2019 11:30 AM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷும் இணைந்து நடிக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, விஜய்சேதுபதி நடிக்கும் 33-ஆவது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலை எற்கெனவே பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நட்புக்காக இயக்குனர் மோகன்ராஜாவும் நடிக்கிறார் என்ற தகவலை ‘ஜெயம்’ ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘சந்திரா ஆர்ட்ஸ்’ நிறுவனமும் ’சினி இனோவேஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். வீரசமர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பை கவனிக்கிறார். விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

#YOYK #YaadhumOoreYaavarumKelir #VSP33 #VijaySethupathi #MeghaAkash #MagizhThirumeni #NivasKPrasanna #ChandraArts #CineInnovations #EssakiDurai #VenkataKrishnaRoghanth #ActorVivekh #DirectorMohanRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;