‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. தினேஷ், ‘கயல்’ ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். அடுத்த மாதம் 6-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை பேசும்போது,
‘‘தோழர்’ என்ற வார்த்தையை சொன்னதற்காக என்னை வேலையை விட்டு துரத்தியிருக்கிறார்கள். ஆனால் ரஞ்சித் அவர்கள் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. காயிலான்! (இரும்புக்கடை) கடையில் வேலை பார்த்தவன் நான்! இரும்புக்கடையில் வேலை செய்யும்போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. மூக்கிலிருந்து ரத்தம் எல்லாம் வரும். இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். அவர்கள் பற்றி இந்த படம் பேசும். அதே நேரம் இந்த படத்தில் ஒரு லாரி ஓட்டுனரின் கதையும் இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டு கொள்வதில்லை. இன்னொருத்தரின் உழைப்பை சுரண்டும் சமூகமாகத்தன் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்தில் நடக்கிற எல்லா விஷயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசும். இந்த படத்தை பார்த்துவிட்டு ரஞ்சித் அவர்கள் நீலம் புரொடக்ஷஸுக்கு நீ மற்றொரு பெரிய வாசலை திறந்து விட்டாய்’ என்றார். அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘பறியேறும் பெருமாள்’ படம் எப்படி நீலம் புரொடக்ஷன்ஸுக்கு ஒரு அங்கீகாரத்தையும் பெருமையையும் தேடித் தந்ததோ அதைப் போல இப்படமும் இந்த நிறுவத்துக்கு பெருமை சேர்க்கும்’’ என்றார்.
இசை ஆல்பங்கள் மூலம் பிரபலமான தென்மா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’, ‘கலா’ ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#IrandamUlagaporinKadaisiGundu # PaRanjith #AdhiyanAadhirai #NeelamProduction # Dinesh
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்று சசிகாந்தின் ‘Y NOT STUDIOS....
இயக்குனராக இருந்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் மூலம்...