‘தர்பார்’ படத்துடன் பொங்கல் ரேசில் இணைந்த பிரபுதேவா படம்!

‘தர்பார்’ படத்துடன் பொங்கலுக்கு வெளியாகும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’

செய்திகள் 21-Nov-2019 6:15 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல். ‘டிக் டிக் டிக்’ படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவாவுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் பிரபு தேவாவின் கேரக்டரின் தனைமையை குறிக்கும் விதமாக ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’ என்ற திருக்குறள் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து, இப்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘தர்பார்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது அந்த படத்துடன் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படமும் பொங்கல் ரேசில் குதித்துள்ள தகவல் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பது நிச்சயம்.

‘பொன்மாணிக்கவேல்’ படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளனர்.

#PrabhuDeva #PonManickavel #ACMughil #PonManickavelFromPongal2020 #DarbarFromPongal2020 #NivethaPethuraj #ARMurugadoss #Rajinikanth #Nayanthara M

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;