கார்த்தி அறிமுகம் செய்து வைத்த ‘ZEE தமிழ்’ டிவி சினிமா விருது!

சிறந்த திரைப்படம் மற்றும் கலைஞர்களுக்கு ‘ZEE தமிழ்’ டிவியும் விருது வழங்க இருக்கிறது!

செய்திகள் 21-Nov-2019 3:35 PM IST Top 10 கருத்துக்கள்

ஆண்டு தோறும் பல்வேறு நிறுவனங்கள் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வரும் நிலையில் ‘ZEE தமிழ்’ டிவி சேனலும் இந்த ஆண்டு முதல் சினிமா கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறது. இதற்கான விழா 2020 ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சென்னையிலுள்ள உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. 2018 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2019) நவம்பர் 30-ஆம் தேதி வரையில் ரிலீசான திரைப்படங்களிலிருந்து விருதுக்குரிய திரைப்படங்களையும், கலைஞரக்ளையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்ய, ‘ZEE தமிழ்’ டிவி நிறுவனம அமைத்துள்ள குழுவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கரு பழனியப்பன், பரத்பாலா, நடிகையும், இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம், பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை, சிறந்த காமெடியன், சிறந்த வில்லன், சிறந்த அறிமுக நடிகர், சிறந்த அறிமுக நடிகை, சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த கதை, திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடன இயக்குனர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர், சிறந்த ஒப்பனையாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர், BEST FIND OF THER YEAR, BEST CREW ஆகிய விருதுகளுக்கானவர்களை தேர்வு செய்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட விருதுகள் தவிர, ‘ZEE தமிழ்’ டிவி நிறுவனம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி ரொம்பவும் பிடித்த ஹீரோ, ரொம்பவும் பிடித்த ஹீரோயின், ரொம்பவும் பிடித்த படம், ரொம்பவும் பிடித்த இயக்குனர், ரொம்பவும் பிடித்த பாடல், ரொம்பவும் பிடித்த சமூக பொறுப்புள்ள ஹீரோ, தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தெலுங்கு ஹீரோ, தமிழக ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்தமான மலையாள ஹீரோ, தமிழக ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த கன்னட ஹீரோ என்று மற்றும் 9 விருதுகளும் இவ்விழாவில் வழங்கப்பட இருக்கின்றது.

‘ZEE தமிழ்’ டிவி வழங்க இருக்கும் மேற்குறிப்பிட விருதுகளுக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட கேடயத்தை நடிகர் கார்த்தி சற்று முன் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது கார்த்தி பேசும்போது, ‘‘சினிமா கலைஞர்களை பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது. இப்போது அந்த வரிசையில் ‘ZEE தமிழ்’ டிவி நிறுவனமும் இணைந்து விருதுகள் வழங்கி கௌரவிக்க முன்வந்துள்ள விஷயம் பெரும் மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;