100 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் ஜெய் படம்!

ஆண்ட்ரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் 100 நிமிட  கிராஃபிக்ஸ் காட்சிகள்!

செய்திகள் 20-Nov-2019 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

ஆண்ட்ரு இயக்கத்தில் ஜெய், பானு, தேவ்கில், ராகுல் தேவ், கரு பழனியப்பன், ஜெயப்பிரகாஷ், இந்திரஜா, மான்சி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. ஃபேண்டசி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஜெய் நடுத்தர குடுமபத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவன் என்ற இளைஞராக நடிக்கிறார். இவரது வாழ்க்கை சரியாக போய் கொண்டிருக்கும் நேரத்தில் அநீதிக்கு எதிராக போராடுகையில் ஜெய்க்கு சில பிரச்சனைகள் வருகிறது. இந்த பிரச்சனைகளால் ஏற்படும் சில சம்பவங்களால் அவரது மனைவி, நண்பர்கள் என்று எல்லோராலும் ஜெய் தனிமைப்படுத்தப்படுகிறார். இந்நிலையில் விண் வெளியிலிருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும்போது அதன் ஒரு சிறு துகள் ஜெய் உடலில் துளைக்கிறது. இதனை தொடர்ந்து ஜெய்யை யாராலும் வெல்ல முடியாத அளவுக்கு அவர் ஒரு சூப்பர் ஹீரோவாகிறார். இதுதான் பிரேக்கிங் நியூஸ் படத்தின் கதைக்களம்.

நாகர்கோவிலை சேர்ந்த திருக்கடல் உதயம் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தில் 100 நிமிடங்கள் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ஜானி லால் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்து வருகிறார். விஷால் பீட்டர் இசை அமைத்து வருகிறார்.

#Jai #BhanuSree #Breakingnews #TeluguActressBhanuSree #KarupparNagaram #Neeya2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;