ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி!

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 19-Nov-2019 10:55 AM IST Top 10 கருத்துக்கள்

சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் வெளியாக இருக்கிறது. எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் 1978-ல் இதே டைட்டிலில் ஒரு படம் வெளியாகியுள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம். எழிலின் காமெடி ஃபார்முலாவுடன் ஹாரரும் கலந்து உருவாகியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஈஷா ரெபா, நிகிஷா பட்டேல், சாக்‌ஷி அகர்வால், வென்பா, சதீஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். சத்யா இசை அமைத்து வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை யூ.கே.செந்தில்குமார் கவனித்துள்ளார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்து வருகிறார். ரமேஷ் பி.பிள்ளையில்ன் ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ நிறுவன தயாரிப்பாக உருவாகி வருகிறது ‘ஆயிரம் ஜென்மங்கள்’.

#GVPrakash #Ramesh #CSathya #Ezhil #AayiramJenmangal #EeshaRebba #NikeshaPatel #Venba #Sathish #UKSenthilKumar #GopiKrishna #CSathya #AayiramJenmangalFromDec20

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;