பட வெற்றிக்கு ‘ஸ்கிரிப்டே’ அடித்தளம்!

தொடர்ந்து தரமான படங்களை வழங்கி வரும் எஸ்.ஆர்.பிரபு!

செய்திகள் 18-Nov-2019 7:06 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக வெளிவந்த ஜோக்கர், அருவி, மாயா, மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று, மான்ஸ்டர், ராட்சசி, சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘கைதி’ முதலான படங்கள் ரசிகர்களிடத்தில் மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற படங்களாக அமைந்தது.

இந்த வரவேற்புக்கு முக்கிய காரணம் இப்படங்களின் மாறுபட்ட கதை அமைப்பும், எடுத்துக்கொண்ட கதையை காட்சிப்படுத்தி வழங்கிய விதமும்தான்! ஒரு ஸ்கிரிப்ட்டை எடுத்து படமாக்குவதற்கு முன்பாக அந்த ஸ்கிரிப்ட்டிலுள்ள விஷயங்கள் நம்பகத்தன்மையுடையதா என்பதை ஆராய்ச்சி செய்தும், விவாதம் செய்தும் படமாக்குவதற்காக ஒரு குழு செயல்படுவது அவசியம் என்பதை நன்கு உணர்ந்து அதை செயல்படுத்தியும் வரும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார் மேற்குறிப்பிட படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு. இவருடைய கதை தேர்வு, தேர்வு செய்யப்படும் கதைகளை எப்படி ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக வழகவேண்டும் என்பதிலுள்ள தெளிவு, ஐடியா, திட்டமிடல் ஆகியவையும் மேற்குறிப்பிட்ட படங்கள் ரசிகர்களிடத்தில் பெரும் கவனத்தை பெற முக்கிய பங்காற்றியுள்ளது.

இதன் மூலம் கோலிவுட்டில் கவனம் பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ மற்றும் ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் அடுத்தடுத்த தயாரிப்புகளும் மாறுபட்ட கதைகள், கதைக்களங்கள் கொண்டு உருவாகி ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையை உருவாகியிருப்பதோடு, கதை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கும் ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது மேற்குறிப்பிட்ட தரமான படைப்புகள்!

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு!

#SRPrabhu #DreamWarriorPictures #PotentialStudios #SRPrakashBabu #Kaithi #Raatchasi #Joker #Monster #Maya #Maanagaran #TheeranAdhigaaramOndru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;