‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு!

கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு நடிக்கிறார்!

செய்திகள் 18-Nov-2019 4:04 PM IST Top 10 கருத்துக்கள்

கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகளான நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக நேற்று மாலை சென்னையில் ‘உங்கள் நான்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜாவின் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்த இவ்விழால் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பார்த்திபன், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, வடிவேலு இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், தேவிஸ்ரீ பிரசாத், இயக்குனர் எஸ்.ஏஸ்.சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டது. ‘தலைவன் இருக்கிறான்’ திரைப்படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல்’ நிறுவனமும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார்.
#KamalHaasan #RaajKamalFilmInternational #LycaProductions #ARRahman #ThalaivanIrukkindraan #Vadivelu #Ungal Naan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;