சுந்தர்.சி.படத்தின் ரிலீஸ் தேதி!

VZ துரை இயக்கத்தில் சுந்தர்.சி. தனிஷிகா நடிக்கும்  ‘இருட்டு’ டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 18-Nov-2019 11:00 AM IST Top 10 கருத்துக்கள்

‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’ முதலான படங்களை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி., தன்ஷிகா முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘இருட்டு’. ‘ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ரிலீசாகும் என்று முதலில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் ‘இருட்டு’ வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது ‘இருட்டு’ டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் சுந்தர்.சி., தன்ஷிகாவுடன் சாக்சி பர்வீந்தர், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். கிரிஷ் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.சுதர்சன் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து கவனித்துள்ளார். சுந்தர்.சி.போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்த ‘ஆக்‌ஷன்’ சென்ற 15-ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சுந்தர்.சி. கதையின் நாயகனாக நடிக்கும் ‘இருட்டு’ மூன்று வார இடைவெளியில் டிசம்பர் 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

#VZDurai #SundarC #SaiDhanshika #HipHopTamizhaAdhi #Iruttu #IruttuFromDec6

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;