சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகியவை ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் மற்றொரு படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, சிபிராஜுடன் சமுத்திரக்கனி, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிரின் கஞ்ச்வாலா, ஷனம் ஷெட்டி, ரித்விகா ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகளும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘11.11 புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் பிரபு திலக், திருமதி ஸ்ருதி திலக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
#Sibiraj #Samuthirakani #ShirinKanchwala #11:11 Productions #Anbu #GauthamVasudevMenon #WalterDubbingStarted
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...